பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை இதற்கு உண்டு. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இங்கு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 100.52 அடியாக இருந்தது.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி காலிங்கராயன் பாசனத்துக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 566 கன அடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து நேற்று மாலை 3 மணி நிலவரப்படி தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story