குளித்தலையில் ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை


குளித்தலையில் ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை
x

குளித்தலையில் ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

கரூர்

குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மணத்தட்டை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். இதில் குளித்தலை நகராட்சி பொறியாளர் ராதா, போக்குவரத்து பணிமனை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து பணிமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story