ரூ.30¼ லட்சத்தில் பூங்கா அமைக்க பூமி பூஜை
தர்மபுரி ஏ.எஸ்.டி.சி. காலனியில் ரூ.30¼ லட்சத்தில் பூங்கா அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
தர்மபுரி நகராட்சி 9-வது வார்டு ஏ.எஸ்.டி.சி. காலனியில் நகராட்சி சார்பில் பசுமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.30 லட்சம் மதிப்பில் நடைபயிற்சி பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புல்தரை-அழகிய செடிகள் கொண்ட பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், துணைத்தலைவர் நித்யா அன்பழகன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, பொறியாளர் ஜெயசீலன், கவுன்சிலர் ஜெகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஒப்பந்ததாரர் ராஜ்குமார் நன்றி கூறினார்.