மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்


மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாரண்ட‌அள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை செந்தில்குமார் எம்.பி. வழங்கினார்.

தர்மபுரி

மாரண்ட‌அள்ளி:

மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், வக்கீல் பி.கே.முருகன், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்க சரவணன், மேலாண்மை குழு தலைவர் பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு 205 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story