பிறந்த நாள் விழா-வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


வ.உ.சி. பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை


வ.உ.சி. பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ.உ.சி. பிறந்த நாள் விழா

மதுரை மாவட்டத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மதுரை சிம்மக்கல் அருகே உள்ள வ.உ. சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் வ.உ. சி. சிலைக்கு வெங்கடேசன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழாவையொட்டி அவனியாபுரம் பஸ் நிலையம் அருகில் இருந்து மந்தையில் உள்ள வ.உ.சி. சிலை வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவனியாபுரம் பகுதி செயலாளர் முத்துமணி, தொகுதி தலைவர் கணேசமூர்த்தி, துணைத்தலைவர் ராமர் மற்றும் நிர்வாகிகள் முருகன், ராவணன், வினோத், ஆறுமுகம், சுரேஷ், சிவக்குமார் கலந்து கொண்டனர்.

மாலை அணிவிப்பு

திருநகர் மக்கள் மன்றம் சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவுக்கு மன்ற தலைவர் கவிஞர் செல்லா தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கமம் ராசேந்திரன் வரவேற்றார். உதவித்தலைவர் பொன்.மனோகரன் முன்னிலை வகித்தார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராகாந்தி வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராகிம், திருநகர் நடைப்பயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் நகரச்செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமையில், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலையில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர் முருகேசன் லட்டு வழங்கினார். இதேபோல் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசிம்மன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். மண்டல தலைவர் கதிர்வேல் இனிப்பு வழங்கினார். ம.தி.மு.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், நாடார் பேரவை, தே.மு.தி.க, அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி, நாம்தமிழர் கட்சி யினர் ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.


Next Story