பா.ஜ.க கூட்டணி கட்சிகள் கூட்டம்: அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா.வுக்கு மட்டும் அழைப்பு; ஓ.பி.எஸ் அதிர்ச்சி


பா.ஜ.க கூட்டணி கட்சிகள் கூட்டம்: அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா.வுக்கு மட்டும் அழைப்பு; ஓ.பி.எஸ் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 July 2023 6:31 AM GMT (Updated: 11 July 2023 6:35 AM GMT)

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். ஒருபுறம் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு, மறுபுறம் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் வரும் 18-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க தலைமையின் இந்த முடிவு, பன்னீர் தரப்பை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story