பா.ஜனதா கொடியேற்று விழா


பா.ஜனதா கொடியேற்று விழா
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:46 PM GMT)

செங்கோட்டையில் பா.ஜனதா கொடியேற்று விழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகர பா.ஜனதா சார்பில் காலாங்கரை பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. நகர தலைவா் வேம்புராஜன் தலைமை தாங்கினார். நகர பார்வையாளா் சீனிவாசன், நகர பொதுச்செயலாளா்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைத்தலைவா் கணேசன் வரவேற்று பேசினார். தொடா்ந்து கிளைத்தலைவா் புதியவன் கட்சி கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர துணைத்தலைவா் சந்திரன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் பொன்னுலிங்கம் என்ற சுதன், கூட்டுறவு பிரிவு செயலாளர் வர்மாதங்கராஜ், அமைப்புசாரா பிரிவு செயலாளர் காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story