ராமேசுவரம் தபால் அலுவலகத்தில் தேசிய கொடி வாங்கிய பா.ஜனதாவினர்


ராமேசுவரம் தபால் அலுவலகத்தில் தேசிய கொடி வாங்கிய பா.ஜனதாவினர்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை கொண்டாட ராமேசுவரம் தபால் நிலையத்தில் பா.ஜனதாவினர் தேசிய கொடி வாங்கினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவதற்காக ராமேசுவரம் தபால் நிலையத்தில் பா.ஜனதா நகர்தலைவர் ஸ்ரீதர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் வீடுகளில் ஏற்றுவதற்காக தேசிய கொடியை வாங்கினார்கள். பின்னர் அவர்கள் தபால் நிலையத்தின் முன்பாக தேசிய கொடியை காண்பித்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மாரி பிச்சை, நகர் பொதுச்செயலாளர்கள் முருகன், செல்வம், நகர் பொருளாளர் சுரேஷ், ஒ.பி.சி.அணி நகர் தலைவர் சங்கிலி குமரன், பிரசார பிரிவு நகர தலைவர் பால்ராஜ், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் அரசம்மாள், நகர் துணைத்தலைவர் சின்னகருப்பையா, முன்னாள் ராணுவ பிரிவு நிர்வாகி பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Related Tags :
Next Story