திண்டுக்கல்லில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிரணி கிழக்கு மாவட்ட தலைவி சித்ரா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட துணைத்தலைவி லீலாவதி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் மோனிகா, விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி துணைத்தலைவி ருக்மணி, பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மகுடீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story