பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைது செய்யக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைது செய்யக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைது செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாகவும், அவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாகவும் சிலைமான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சுசீந்திரன், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் அரசு தரப்பு மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது மனுதாரர் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகி, தேவர் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதற்காக உரிய பணிகளில் மாவட்ட தலைவர் என்ற முறையில் மனுதாரர் ஈடுபட வேண்டும். எனவே அவரை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story