பா.ஜ.க.வினர் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது: ஆர்.பி.உதயகுமார்


பா.ஜ.க.வினர் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது: ஆர்.பி.உதயகுமார்
x

உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது ;

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

நேற்று மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடல் கொண்டு வரப்பட்டது. பொதுவாகவே இதுபோன்ற நிகழ்வுகளில், தமிழக அரசு, அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கப்படுவது மரபான ஒன்று.

நிதியமைச்சரின் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி பாஜக தொண்டர்களிடையே உணர்ச்சியை கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் வார்த்தையை கடுஞ்சொல்லாக நினைத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று இதுவரை நடைபெற்றதில்லை என கூறிய அவர், துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறினார்.உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story