பா.ஜ.க.வினரின் கருப்புக்கொடி போராட்டம் வாபஸ்


பா.ஜ.க.வினரின் கருப்புக்கொடி போராட்டம் வாபஸ்
x

பா.ஜ.க.வினரின் கருப்புக்கொடி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருச்சி

திருச்சி, மே.31-

திருச்சி மேற்கு தாலுகாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் அடுக்குமாடிவீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை 2017-ம் ஆண்டு முழுமையாக பணத்தை செலுத்திய பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியினர் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சிக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையில் பா.ஜனதா கட்சியினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினார். அதன்பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி ஆர்.டி.ஓ. தவசெல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை (இன்று) நடக்க இருந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை கைவிடுவதாக பா.ஜனதா கட்சியினர் அறிவித்தனர்.


Related Tags :
Next Story