தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை


தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை
x

தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பருக்கல் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியின் மகன் வசந்த் (வயது 17). கூலி தொழிலாளி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் வசந்த் தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில் தூக்குப்போட்டு வசந்த் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story