ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா


ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
x

ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 98-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மகா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

அதன்பின் மங்கள வாத்தியங்களுடன், சிறப்பு மங்கள வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

பின்னர் சுவாமி மாட வீதியின் வழியாக நாதஸ்வர வாத்தியங்களுடன் புறப்பாடும் இரவில் அன்னவாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகளுடன் காலை சாமி திருவீதி உலாவும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கருட சேவை உற்சவமும், 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழா குழு தலைவர் வக்கீல் சி.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் முத்துசாமி, உபயதாரர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story