திருத்தணி செருக்கனூர் ஏரியில் உடைப்பு; வீணாகும் தண்ணிரை தடுத்து நிறுத்த கோரிக்கை


திருத்தணி செருக்கனூர் ஏரியில் உடைப்பு; வீணாகும் தண்ணிரை தடுத்து நிறுத்த கோரிக்கை
x

திருத்தணி செருக்கனூர் ஏரியில் உடைத்ததாக வீணாகும் தண்ணிரை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம், செருக்கனூர் ஊராட்சியில் செருக்கனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் செருக்கனூர், இ.எண்.கண்டிகை, தலையாரிதாங்கல், தாடூர், வீரகநல்லூர் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமான விவசாயிகளின் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக செருக்கனூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியிருந்தது. இந்த நிலையில் அந்த ஏரியில் தடுப்பு சுவரை மர்ம நபர்கள் சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டு தடுப்பு சுவரை சரிசெய்தும், கரையை பலப்படுத்தியும் தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story