வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்்ன்றனர்.

நகை, பணம் திருட்டு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 56). இவர் தனது மனைவி சந்திரா, மகன் ரமேஷ், மருமகள் விஜயலட்சுமி ஆகியோருடன் வீட்டை பூட்டி விட்டு காரைக்கால் சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதி்ர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோவை உடைத்து 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story