வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளி பொருட்கள் திருட்டு

திருச்சி, கே.கே. நகர், தங்கையா நகரை சேர்ந்தவர் கலை மணி (வயது 77). இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் பரமேஸ்வரன் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, வீட்டில் இருந்த வெள்ளிபொருட்கள் திருடப்பட்டு இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மகன்களுடன் தந்தை மாயம்

*திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (44). இவர் மனைவியை பிரிந்து அஸ்வத் (12) லோகேஷ் (7) ஆகிய 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சாமிநாதனுடன் அவரது மனைவியை சேர்த்து வைக்க தாய் மாலதி முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சி நடந்துள்ளது. இதனால் மனம் உடைந்த சாமிநாதன் மகன்களுடன் மாயமாகிவிட்டார். இது குறித்து சாமிநாதனின் தாய் மாலதி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

கல்லூரி மாணவி மாயம்

*திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் இனுசியா (18). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

*முசிறி அருகே உள்ள சேருகுடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சுரேஷ்குமார் (30). இவ்ர் ஆட்டோவில் பூண்டு, உருளைக்கிழங்கு மற்றும் மளிகை சாமான்கள் விற்பனை செய்து வந்தார். கடந்த மே மாதம் 16-ந்தேதி தண்டலைபுத்தூர் பகுதியில் வியாபாரம் செய்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் ரூ.5 ஆயிரத்து 300 மற்றும் அரை பவுன் தங்க மோதிரத்தை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில், முசிறி போலீசார் 4 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தண்டலைபுத்தூர் சேர்ந்த அழகர் மகன் அலெக்சாண்டர் (24) மாரிமுத்து மகன் பிரபாகரன் (28) அர்ஜுனன் மகன் விக்னேஷ்பாரதி (24) மற்றும் சுப்ரமணியன் மகன் சுரேஷ்குமார் ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

*திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவர் பொன்மலை மாஜி ராணுவ காலனி பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கத்தியை காட்டி ரூ.1,200 பறித்ததாக குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (20), நாமக்கல் ராசிபுரம் கோனார் பட்டியை சேர்ந்த மானோஜ்குமார் (21) ஆகியோரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story