தனியார் பஸ் கண்டக்டர் வீட்டில் திருட்டு


தனியார் பஸ் கண்டக்டர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 26 July 2022 12:15 AM IST (Updated: 26 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பஸ் கண்டக்டர் வீட்டில் பணம், செல்போன்கள் திருட்டு போனது.

கிருஷ்ணகிரி

மத்தூர்:-

மத்தூர் அருகே களர்பதி, கலைஞர்நகர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் (வயது 40). தனியார் பஸ் கண்டக்டர். இவர், வீட்டின் அருகே புதிய வீடு கட்டி வருகிறார். வேலை இன்னமும் முடிவடையாத நிலையில் தற்காலிக கதவு அமைத்து புதிய வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள், பர்கத் வீட்டில் இருந்த ரூ.23 ஆயிரம், 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். காலையில் எழுந்த பர்கத், வீட்டில் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story