வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளிடம்டோல்கேட், அக்.6-
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பழூர் பகுதியை சேர்ந்தவர் மணிபாரதி (வயது 50). இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நதில்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மணிபாரதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பட்டூர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிபாரதி கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.