பஸ்கள் மோதல்; 8 பேர் காயம்


பஸ்கள் மோதல்; 8 பேர் காயம்
x

பாளையங்கோட்டையில் பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை நொச்சிக்குளத்தில் இருந்து நெல்லை சந்திப்பு செல்லும் அரசு பஸ், பாளையங்கோட்டையில் ஒரு ஆஸ்பத்திரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று பயணிகளை இறக்கிவிடுவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பஸ்சில் பயணம் செய்த வல்லநாட்டைச் சேர்ந்த பிரகாஷ்பதி (வயது 45), மகராசி (37), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த உலகநாதன் (20), முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் (53), கரையிருப்பைச் சேர்ந்த பார்வதி (65), மேலகுன்னத்தூரைச் சேர்ந்த அமுதா (19), சோனா (21), ரூத்மேரி (52) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story