விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு பஸ் வசதி
தரம் உயர்த்தப்படும் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு பஸ் வசதி ெசய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு பஸ் வசதி ெசய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்நிலையம்
விருதுநகர் சந்திப்பு ெரயில் நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ெரயில் பாதையில் முக்கிய ெரயில் நிலையமாக விளங்குகிறது.
இந்த ெரயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்களுக்கு பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள ெ்ரயில்கள் இயக்கப்படும் நிலையில் செங்கோட்டை மற்றும் மானாமதுரை மார்க்கமாகவும் ெரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மாவட்டம் முழுவதும் இருந்து இந்த ெரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.
குண்டும், குழியுமான சாலை
ஆனால் ரெயில்நிலையத்திற்கு பயணிகள் சென்று வர வசதியாக பஸ்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ெரயில் நிலையத்திற்கு அதிக பொருட்களுடன், குழந்தைகளுடன் செல்ல வேண்டிய நிலையில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் பயணிகள் குண்டும், குழியுமாக உள்ள ெரயில்வே பீடர் சாலை வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதனால் முதியவர்களும், பெண்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போதைய நிலையில் ஆட்டோக்களை மட்டுமே பயணிகள் நகருக்குள் வருவதற்கு பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
வலியுறுத்தல்
ஆனால் அனைவருக்கும் இதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் ெரயில் நிலையத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பஸ் நிலையத்திற்கு வட பகுதியில் உள்ள இடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை ெரயில் நிலையம் வழியாக செல்வதற்கு வழித்தடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.