சேதமடைந்த தட்டிப்பாலம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த தட்டிப்பாலம் சீரமைக்கப்படுமா?

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி வடசாரி தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் தேவைகளுக்கு திருக்கண்ணபுரம் பஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சவுரிராஜ பெருமாள் கோவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வர நரிமணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தட்டிப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தபாலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது நரிமணியாற்றில் காவிரி நீர் வந்துள்ளதால் ஆற்றை கடக்க முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தட்டிப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story