பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
x

பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சல்லிமலை தெருவை சேர்ந்த முனியசாமி மகள் சரண்யாதேவி (வயது27). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தபோது வீட்டில் இருந்தே தினமும் ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று வந்த விளம்பரத்தினை பார்த்து லிங்கினை கிளிக் செய்து பார்த்தபோது அது குறிப்பட்ட வாட்சப் எண்ணிற்குள் சென்றுள்ளது. சில நொடிகளில் அந்த எண்ணில் இருந்து ஏஞ்சலா என்ற பெயரில் வந்த குறுஞ்செய்தியில் பிரபல நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக தெரிவித்து ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று அந்த குறுஞ்செய்தி தகவல் இருந்துள்ளது. அப்போது ஒவ்வொரு பணிக்கும் விதிமுறைகளின்படி பணம் செலுத்துமாறு கூறியதால் சரண்யாதேவி தனது வங்கி கணக்கில் இருந்து ஜீபே மூலம் பலதவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 பணம் அனுப்பி உள்ளார்.இவ்வாறு தொடர்ந்து சென்ற நிலையில் அவரின் இணைய கணக்கில் கட்டிய பணத்துடன் சம்பளம் சேர்த்து மொத்தம் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 115 இருப்பு உள்ளதாக காட்டி உள்ளது. வீட்டில் இருந்தே இவ்வளவு அதிகம் சம்பாதிக்கலாமா இதுதெரியாமல் போச்சே என்று எண்ணி அந்த பணத்தினை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யாதேவி இணைய தளத்தில் தேடிப்பார்த்தபோது மேற்படி நபர்கள் போலியானவர்கள் என்பது தெரிந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சைபர்கிரைமில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story