விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன மோசடி


விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன மோசடி
x

ராமநாதபுரம் அருகே கடன் தருவதாக விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே கடன் தருவதாக விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறுஞ்செய்தி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரம் காந்தி நகரை சேர்ந்த சக்கரை மகன் மலைச்சாமி. விவசாயியான இவர் செல்போனுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி பிரபல நிதி நிறுவன பெயரில் குறுஞ்செய்தி வந்து உள்ளது. அந்த குறுஞ்செய்தியில் கடன் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தகவலை பார்த்த மலைச்சாமி தனது குடும்ப சூழ்நிலை கருதி கடன் வாங்கி தொழில் செய்து கொள்ளலாம் என்று எண்ணி அதில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய பெண் ஒருவர் மலைச்சாமியிடம் விவரங்களை கேட்டறிந்து ரூ.3 லட்சம் வரை கடன் தரலாம் என்று தெரிவித்துள்ளார். ரூ.3 லட்சம் தருகிறார்களே என்று மகிழ்ந்த மலைச்சாமியிடம் அந்த பெண் அதற்கான ஆவணங்களை வாட்சப்பில் அனுப்பி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

பதிவு கட்டணம்

மலைச்சாமி தன்னிடம் வாட்ஸ்சப் இல்லை என்பதால் தனது நண்பரின் செல்போனில் இருந்து அவர்கள் கேட்ட விவரங்கள் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். சில மணி நேரங்களில் கடன் அனுமதிக்கப்பட்டதாக கடிதம் வந்துள்ளது.

அதனை பார்த்த மலைச்சாமி கடன் எப்படி பெறுவது என்பதை சிந்தித்து கொண்டிருக்கும்போது அவரை தொடர்பு கொண்ட பெண் லோனுக்கான பதிவு கட்டணம் ரூ.3 ஆயிரத்து 600 அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர்கள் தெரிவித்தபடி வங்கி கணக்கில் இருந்து அந்த தொகையை அனுப்பிய நிலையில் பல்வேறு காரணங்களை கூறி கடன் பெற வேண்டும் என்றால் இந்த தொகை அந்த தொகை என்று கேட்டுள்ளனர்.

கடன் அனுமதி

கடன் அனுமதிக்கப்பட்டு விட்டதே பெற்றுக்கொண்டு விடலாம் என்று எண்ணி அவர்கள் கேட்டபடி ரூ.67ஆயிரத்து 100 பணத்தினை அனுப்பி உள்ளார். அதன்பின்னர் தனக்கு தருவதாக தெரிவித்த ரூ.3 லட்சம் பணத்தினை தாருங்கள் என்று அவர்களின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அனைத்து எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்படி ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story