ஊராட்சி மன்ற தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு


ஊராட்சி மன்ற தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
x

ஊராட்சி மன்ற தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி மற்றும் அவரது கணவர் ஆளவந்தான் ஆகிய இருவரும் தன்னை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி துணைத் தலைவர் நாகராணி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி மற்றும் அவருடைய கணவர் ஆளவந்தான் ஆகியோர்மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி திருநாவலூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தண்டபாணி, செயலாளர் மருதுபாண்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story