முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதில்லை'-கடலாடி ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு


முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதில்லை-கடலாடி ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
x

கடலாடி பகுதிகளில் முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதில்லை என ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி பகுதிகளில் முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதில்லை என ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன் வரவேற்றார்.

துணை சேர்மன் ஆத்தி, கடலாடி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஒன்றிய மேலாளர் பாலதண்டாயுதம், ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடிநீர் வழங்குவதில்லை

கூட்டத்தில் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் கழிப்பறைகள் முழுவதும் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. அதனை சரி செய்யவும் கடலாடி ஒன்றியத்தில் முறையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன் தெரிவித்தார்.

ஒன்றிய கவுன்சிலர் பிச்சை பேசும் போது, ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் போதுமான குடிநீர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமி, அருணகிரி கொட்டகை கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். ஆப்பனூர் ஊராட்சி இளையனை கொட்டகை கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்றார்.

ஒன்றிய கவுன்சிலர் செய்யது ராவியா, மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த 5ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் வசந்தா கதிரேசன், முருகலட்சுமி மலைராஜ், ராேஜந்திரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்கள்.


Next Story