காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 22-ந்தேதி நடைபெறுகிறது


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 22-ந்தேதி நடைபெறுகிறது
x

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பியநிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story