மகளிர் தின விழா கொண்டாட்டம்
கடையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கடையம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடையம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், விளிம்பு நிலை நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான முதல்கட்ட தேவைகளை கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமில் கடையம் வட்டார அரசு தலைமை மருத்துவர் பழனிகுமார் கலந்து கொண்டு, மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கி பேசினார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், ரம்யா ராம்குமார், ஆவுடையகோமதி, சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்திகிராம சாந்தி காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். கிராம நிர்வாக அலுவலர் செல்வம் முதியோர் உதவித்தொகை, நலிவுற்றோருக்கான உதவிகள், அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து பேசினார்.
முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சுபா, பொன் எபரன்ஸ், ராஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். மேலாளர் ஜேசு மரிய அந்தோணி நன்றி கூறினார்.