சென்டிரல்-சார்மினார் ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்டிரல்-சார்மினார் ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்டிரல்-சார்மினார் ரெயில் சேவை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆந்திரா மாநிலம், குண்டக்கலில் தண்டவாள சீரமைப்புப் பணி காரணமாக, திருப்பதியிலிருந்து, காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண் 07581) மற்றும் காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07660) சேவைகள் ஜூலை 2-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதிக்கு காலை 6.25 மணிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16057) நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 2-ந்தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும். திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்டிரல் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 10.35 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்படும். மதியம் 1.35 மணிக்கு திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் (06728) ரேணிகுண்டாவில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் சேவை மாற்றங்கள் நாளை முதல் ஜூலை 2-ந்தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 7.50 மணிக்கு சார்மினார் செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் (22826) ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 8.10 மணிக்கு சந்திரகாட்சி செல்லும் அதிவிரைவு ரெயில் (22808) வரும் 29-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story