அகல ரெயில் பாதை பணிகளை தலைமை நிர்வாக அதிகாரி ஆய்வு


அகல ரெயில் பாதை பணிகளை தலைமை நிர்வாக அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:45 PM GMT)

சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே அகல ரெயில் பாதை பணிகளை தலைமை நிர்வாக அதிகாரி ஆய்வு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை 16.2 கிலோ மீட்டர் தூரத்தக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை உள்ள ரெயில் வழித்தடத்தில் 2 பெரிய பாலங்கள், 23 சிறிய பாலங்கள், 9 சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையிலான ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.குப்தா, தலைமை செயற்பொறியாளர் ராம் கிஷோர் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ரெயில் பாதை பணி தரமான முறையில் அமைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்த தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.குப்தா, ரெயில் பாதை இடையே அமைய உள்ள பாலங்கள், சுரங்க பாதைகள் விவரத்தை கேட்டறிந்து அதன் வரைபடத்தை பார்வையிட்டார். ஆய்வுக்குபின் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் தச்சூர், தென்கீரனூர் உள்பட 4 இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் வாணியந்தல்.ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story