போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
தேசிய பாதுகாப்பு வாரத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
52- வது தேசிய பாதுகாப்பு வாரம் கடந்த 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சிட்கோவில் நடைபெற்றது. இதில் மேலாண்மை இயக்குனர் வி.ஜெயச்சந்திரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு பணியிட பாதுகாப்பு குறித்து ஊழியர்களிடம் எடுத்துரைத்தனர். 3-ந் தேதி முதல் நடை பெற்ற தொழிலக பாதுகாப்பு குறித்த வரைபடம் வரைதல், அவசர கால பாதுகாப்பு கவசங்கள் அணிதல், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் அபாயங்கள் குறித்த கட்டுரைகள் எழுதுதல், கவிதை எழுதல், பாதுகாப்பு குறித்த வினாடி- வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வாழக்பட்டது. இதில் சி.இ.டி.பி. அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story