சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 6 Sept 2023 6:29 AM IST (Updated: 6 Sept 2023 11:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் ஆலுவா-கலமசேரி இடையே உள்ள ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16127) வருகிற 11-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம்-குருவாயூர் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story