எம்.ஜி.ஆர். சென்டிரல், அகமதாபாத் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எம்.ஜி.ஆர். சென்டிரல், அகமதாபாத் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

எம்.ஜி.ஆர். சென்டிரல், அகமதாபாத் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* அகமதாபாத் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (வண்டி எண்: 12655) இடையே இரவு 9.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்று பாதையில் சாயாபுரி, நாக்டா, மக்ஸி, சாந்த் ஹிர்தராம் நகர், போபால், இடார்சி, நாக்பூர், வர்தா வழியாக இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர். சென்டிரல் - அகமதாபாத்(12656) இடையே காலை 10.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (சனிக்கிழமை) மாற்று பாதையில் புசாவல், அகோலா, போபால், சாந்த் ஹிர்டாரம் நகர், மக்ஸி, நாக்டா, சாயாபுரி வழியாக இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர். சென்டிரல் - ஜோத்பூர்(22663) இடையே மதியம் 3.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (சனிக்கிழமை) மாற்று பாதையில் அகோலா, போபல், நாக்டா, ரத்லாம், சிட்டெளகர், அஜ்மீர் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story