தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்
தேவர் குருபூஜையை முன்னிட்டு கல்லல் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
தேவர் குருபூஜையை முன்னிட்டு கல்லல் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
குதிரை வண்டி
காரைக்குடி அருகே கல்லலில் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் காரைக்குடி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 74 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய குதிரை வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 15 குதிரைகள் பங்கேற்று முதல் பரிசை உறையூர் விஜயா வண்டியும், 2-வது பரிசை கரூர் பாரத் பஸ் கம்பெனி வண்டியும், 3-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாதரகுடி வளர்மதி வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி காவ்யா வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும் பெற்றது.
பரிசுகள்
தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 40 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அவனியாபுரம் ராஜாராம் வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை குருந்தம்பட்டு பாக்கியம் வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை வெற்றியூர் சுப்பு வண்டியும், 2-வது பரிசை பாதரக்குடி வளர்மதி வண்டியும், 3-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர்
இதேபோல் திருப்பத்தூர் அருகே அச்சரம்பட்டி கிராமத்தில் தேவர் குருபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 2-வது பரிசை கல்லாப்பேட்டை மந்தையம்மன் வண்டியும், 3-வது பரிசை எரிச்சி கமல் வண்டியும் பெற்றது.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 48 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை விராமதி துரைராஜ் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.