காரைக்குடி அருகே கோவில் தேர் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்


காரைக்குடி அருகே கோவில் தேர் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

காரைக்குடி அருகே கல்லல் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே கல்லல் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே உள்ள கல்லல் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் மாசி மக தேரோட்டத்தை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 30 குதிரை வண்டிகள் கலந்துகொண்டு பெரிய குதிரை வண்டி பந்தயம், சின்ன குதிரை வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருச்சி உறையூர் உதயசூரியன் வண்டியும், 2-வது பரிசை குருந்தம்பட்டு பாக்கியநாதன் வண்டியும், 3-வது பரிசை திருச்சி மாரிஸ்ராஜா வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்ன குதிரை வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சாக்கோட்டை முரளி வண்டியும், 2-வது பரிசை தஞ்சாவூர் குண்டுமணி வண்டியும், 3-வது பரிசை மருதாண்டகுறிச்சி அழகுநாச்சி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் மாட்டு வண்டி பந்தயம் அமராவதிபுதூர்-ஆறாவயல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 25 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 2-வது பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அமராவதிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும் பெற்றது.

2-வது பிரிவில் முதல் பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் வண்டியும், 2-வது பரிசை நெடோடை மைனர் மார்த்தாண்டன் வண்டியும், 3-வது பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story