கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)

காளையார்கோவில் மற்றும் பாகனேரி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் மற்றும் பாகனேரி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேப்பல் கிராமத்தில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் மேப்பல்-காளையார்கோவில் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 வண்டிகள் கலந்துகொண்டது. முதலில் நடைபெற்ற பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேப்பல் சத்தியநாதன் வண்டியும், 2-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை செல்கண்மாய் ராமலிங்கம் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேப்பல் சத்தியநாதன் மற்றும் நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும் பெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

இதேபோல் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பாகனேரியில் உள்ள பாரத விநாயகர் கோவில் காவடி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் புகழேந்தி வண்டியும், 3-வது பரிசை கொடிக்குளம் கவுதம் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாகனேரி தோடுமுருகன் மற்றும் துவரங்குளம் கரும்பு செல்வம் வண்டியும், 2-வது பரிசை துரும்புப்பட்டி மாதவன் வண்டியும், 3-வது பரிசை பாகனேரி மதியாபுலி ஆகாஷ் வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story