சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை..!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்து 680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story