முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தெலுங்கானா அதிகாரிகள் குழு ஆய்வு


முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தெலுங்கானா அதிகாரிகள் குழு ஆய்வு
x

கோப்புப்படம்

முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டம் கடந்த 25-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர் .

இந்த நிலையில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது. உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிடுகின்றனர்.

அந்த வகையில் சென்னை ராயபுரம் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story