காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் சிவன் தெற்கு வீதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி காலை காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடந்தது. பின்னர் இரவு சந்தனக்காப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து தீபாராதனையும், அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story