குடிமைப்பொருள் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
குடிமைப்பொருள் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் வழங்கும் துறையின் சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார். பறக்கும் படை தனி தாசில்தார் மாயகிருஷ்ணன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எடை மற்றும் முத்திரைகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ரேஷன் அட்டையில் பொருள் வாங்குபவர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் வரவேற்றார். முடிவில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் உமா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story