அரசு அலுவலகங்களில் தூய்மை பணி


அரசு அலுவலகங்களில் தூய்மை பணி
x

அரசு அலுவலகங்களில் தூய்மை பணி நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள பெருமாள் கோவில் ஊராட்சியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் ஊராட்சியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் தூய்மை பணி நடந்தது. அப்போது அலுவலகங்களை சுற்றி உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் அலுவலகங்களின் மேல் தளங்களில் தேங்கி கிடந்த குப்பைகளும் அகற்றப்பட்டன. இந்த பணியை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுதா, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story