தூய்மை பணி சிறப்பு முகாம்


தூய்மை பணி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 17 Sept 2023 3:15 AM IST (Updated: 17 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 நாட்கள் தூய்மை பணி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 நாட்கள் தூய்மை பணி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ரெயில் நிலையத்தின் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்தனர். ரெயில் நிலையத்துக்குள் என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. இதில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

மேலும் பயணிகளிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதோடு, மஞ்சப்பை வழங்கினர். இதேபோல் ரெயில் நிலையம் உள்பட பொது இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து தூய்மை பணி நடைபெற்றது. இந்த தூய்மை பணி வருகிற 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முகாம் தொடக்க நிகழ்ச்சியில் ரெயில்வே வர்த்தக ஆய்வளார் சத்தியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஷியாம், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story