கொங்கணாபுரத்தில்ரூ.2¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
சேலம்
எடப்பாடி
கொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 815 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 15 மூட்டை தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.108.60-க்கு விற்பனையானது. மீதமுள்ள தேங்காய் பருப்பு தரத்திற்கு ஏற்றார் போல் விலை போனது. அதன்படி முதல் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.82.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.73.66-க்கும், 2-ம் தரம் அதிகபட்சமாக ரூ.71.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.45-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
Related Tags :
Next Story