வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், எல்லைப்பட்டி, மண்டக குடிநீர் ஊரணி சீரமைப்பு பணியினையும், ஆண்டிப்பட்டியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், விஜயா, சிதம்பரம், சித்ரா ஆகிய பயனாளிகள் வீடுகள் கட்டுமானப் பணிகளையும், சித்தன்னவாசல் சமத்துவபுரம் வீடுகள், பிச்சை என்ற பயனாளியின் வீட்டை பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதையும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு தூய்மைப்படுத்தும் விபரங்களை கேட்டறிந்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருவேங்கைவாசல் அக்ரஹாரம் தெருவில் ரூ.6.93 லட்சம் செலவில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளதையும், விளத்துப்பட்டி கிராமத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, ஆனந்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.