அரியலூர் திரையரங்கில் அடிப்படை வசதிகளை கலெக்டர் ஆய்வு


அரியலூர் திரையரங்கில் அடிப்படை வசதிகளை கலெக்டர் ஆய்வு
x

அரியலூர் திரையரங்கில் அடிப்படை வசதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் திரையரங்கில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இருப்பில் உள்ள தீயணைப்பு வாளிகளின் எண்ணிக்கை மற்றும் தீயணைப்பு கருவிகள் குறித்த விவரங்கள், விற்பனை செய்யப்பட்டுள்ள சினிமா டிக்கெட்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவற்றின் விலை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், கூடுதலாக குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவும், கழிவறைகளை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்திட வேண்டும் என்றும், நீர்த்தேக்கத்தொட்டிகளில் தேவைக்கேற்ப நீரினை சேமித்து வைத்திட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகத்தினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் அவர் திரையரங்கினை புதுப்பித்தல் சான்று, தீ அணைப்பான் கருவிகளின் புதுப்பித்தல் சான்று மற்றும் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ள தீ அணைப்பான்கள் போன்றவற்றினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட அரியலூர் தாசில்தார் கண்ணனுக்கு அறிவுறுத்தினார்.


Next Story