தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கலெக்டர் ஆய்வு


தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கலெக்டர் ஆய்வு
x

ஆற்காட்டில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு நகராட்சி சித்தி விநாயகர் கோவில் தெருவில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அருங்காட்சியகம் உள்ளது.

இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், தொல்லியல் துறை அலுவலர் ஆயிஷா பேகம், கல்வெட்டு சிற்றெழுத்தர் ரகோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆற்காடு நகராட்சி நகராட்சியில் உள்ள 6 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் ரூ.23½ லட்சத்தில் சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளையும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story