கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் வகையில் 'என் மண் என் தேசம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சேக் அயாஸ் அஹமத் வரவேற்றார். நேரு யுவகேந்திரா மாவட்ட இடையோர் அலுவலர் பிரவீன்குமார் அறிமுக உரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் தபால் நிலைய ஆய்வாளர் மனோஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கான பேரணி வகுப்பு, ரங்கோலி, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்த பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகளை கொண்டு ராமநாதபுரம் சுற்றுப்புறத்தில் உள்ள மண் வகைகளை சேகரித்து அதனை நேரு யுவகேந்திரா தன்னார்வலர் தங்கேஸ்வரர், மாணவி ஆயிஷா பர்வீன் டெல்லிக்கு கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் விதமாக ஒன்று சேர்க்க உள்ளனர். கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் மாணவிகள், பேராசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை உதவி பேராசிரியர் வள்ளி விநாயகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். மாணவி வர்ஷா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story