தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே வேட்டையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது57). இவருடைய மகள் கரீமா (19). கடலூர் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் பேசியபடியும், நீண்ட நேரம் செல்போன் பார்த்தபடியும் இருந்துள்ளார். இதை அவருடைய பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர் மாலை 4 மணி அளவில் செல்போனைபார்த்துக் கொண்டிருந்ததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன வேதனை அடைந்த கரிமா வீட்டுக்குள் சென்று வீட்டின் உத்திரத்தில் சேலையை மாட்டி தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலையரசன் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story