இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு சார்பில் 26-வது தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா குழு உறுப்பினா் பழனிசாமி தலைமை தாங்கினார். குழு உறுப்பினா்கள் சுந்தர், மாரிதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தாலுகா செயலாளா் மாரியப்பன் வரவேற்று பேசினார். கட்சி கொடியினை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட கவுரவ தலைவர் சாமி ஏற்றினார். மாவட்ட செயலாளா் இசக்கித்துரை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளா் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினா்கள் போஸ், வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் கனிமவளங்களை தடுத்து நிறுத்த வேண்டும். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். செங்கோட்டை வாரச்சந்தை பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனே செய்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளா் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

--


Next Story