இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2022 5:30 PM GMT (Updated: 24 May 2022 11:56 AM GMT)

ராயக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூட்டத்தை வைத்து கட்சி வளர்ச்சி குறித்து விளக்கி பேசினார். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி கட்சி ஏற்றிவைத்தார். வட்டார செயலாளர் தொட்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்தவேண்டும். ஏரி புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்துவரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நெல்லூர்-எடவனஅள்ளி வரை தார்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, துணைத்தலைவர் சீனிவாசன், மாநில மாதர் சங்க துணைத்தலைவர் சுந்தரவள்ளி, மாவட்ட கவுன்சிலர் பழனி, ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் மனோகரன், தொட்ட திம்மனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story